ஆப்பிள் 
வணிகம்

இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு கொண்டுசென்ற ஆப்பிள்!

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவிலிருந்து ஐ-போன்களை அமெரிக்காவுக்கு கொண்டுசெல்கிறது ஆப்பிள் நிறுவனம்.

DIN

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, தனக்குச் சொந்தமான 5 விமானங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை இடமாற்றம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அதிக வணிகத்தை மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார்.

அதிக வரி வசூலிக்கும் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை ஏப். 5 முதல் அமலுக்குக் கொண்டுவந்தார். இதன்படி இந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

மேலும், இந்தியா மீது 27% வரி விதிக்கும் டிரம்ப்பின் அறிவிப்பு நாளை (ஏப். 9) அமலுக்கு வரும் நிலையில், முன்கூட்டியே ஐ-போன்களை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் தற்காலிகத் தீர்வை அந்நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்ல ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஆப்பிள் நிறுவனம், முதற்கட்டமாக 3 விமானங்களிலும், பின்னர் 2 விமானங்களிலும் முழுக்க ஐ-போன்களை எடுத்துச் சென்றுள்ளது.

திருத்தப்பட்ட வரி விதிப்பால் சர்வதேச வணிகக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க சந்தைகளில் சில்லறை விற்பனையில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக ஆப்பிள் இந்த முயற்சியை எடுத்துள்ளது.

இது தற்காலிகத் தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது எனவும் ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐ-போன்கள் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய பயனர்கள் முன்பை விட, கூடுதல் விலை கொடுத்து ஐ-போன்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஐ-போன் 16 மற்றும் ஐ-போன் 16 ப்ரோ ஆகிய இரு தயாரிப்புகள் மூலம் இந்தியாவில் தயாரிப்பைத் தொடங்கிய ஆப்பிள் நிறுவனம், தனது உற்பத்தி சங்கிலிக்கு சீனா, வியட்நாம் போன்ற நாடுகளையும் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | லேப்டாப் தயாரிப்பில் களமிறங்கும் செல்போன் நிறுவனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிா்வாகி கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

சிவகங்கையில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

கால்காஜி கோயிலில் சேவகா் அடித்துக் கொலை; 3 போ் கைது

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு: பிரதமா் மோடி அழைப்பு

SCROLL FOR NEXT