முகப்பு
வணிகம்

குறைந்த விலையில் இன்ஃபினிக்ஸின் புதிய ஸ்மார்ட்போன்!

இன்ஃபினிக்ஸ் நோட் 50 எக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றி...

Updated On : 16 ஏப்ரல், 2025 at 7:42 AM
இன்ஃபினிக்ஸ் நோட் 50 எக்ஸ்
பகிர்:

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துவரும் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இன்ஃபினிக்ஸ் நோட் 50 எக்ஸ் (Infinix Note 50X 5G+) என்ற 5 ஜி மாடல் ஸ்மார்ட் போனை வெறும் ரூ. 11,499 முதல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டிராய்டு 15 எக்ஸ் இயங்குதளம்(OS), 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் (RAM), 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. இன்டர்னல் மெமரியுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், கடற்பச்சை, ஊதா மற்றும் கிரே நிறத்தில் கிடைக்கிறது.

கேமிரா அம்சங்கள்

50 எம்பி பின்புறக் கேமிரா

8 எம்பி முன்புறக் கேமிரா

டூயல் பிளாஸ்

4 கே விடியோ பதிவு

முன்புற பிளாஸ்

சிறப்பம்சங்கள்

6.67 அங்குல எச்.டி. பிளஸ் டிஸ்பிளே

5,500 எம்.ஏ.எஸ். பேட்டரி

மீடியாடெக் டி7300 அக்டிமேட் ப்ராசெஸர்

45 வாட் ஃபாஸ்ட் சார்ஜர்

இன்ஃபினிக்ஸ் ஏஐ

விலை

6 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் ரூ. 11,499-க்கும், 8 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் ரூ. 12,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →