கடந்த நிதியாண்டின் இரு சக்கர வாகன சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் 54,45,251 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்தது. இதன் மூலம் சந்தையில் தனது முதலிடத்தை அந்த நிறுவனம் தக்கவைத்துள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 28.84 சதவீதமாக உள்ளது.கடந்த நிதியாண்டில் ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா நிறுவனம் 47,89,283 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து சந்தையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
அந்த நிதியாண்டில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் 33,01,781 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து 17.49 சதவீத சந்தைப் பங்குடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டில் 1,75,27,115-ஆக இருந்த இரு சக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை கடந்த நிதியாண்டில் 8 சதவீதம் அதிகரித்து 1,88,77,812-ஆக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.