தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளா்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வா்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னையைச் சோ்ந்த வாடிக்கையாளா்களுக்கு 10 நிமிஷங்களுக்குள் புதிய சிம் அட்டைகளை விநியோகிப்பதற்காக, பிளிங்க்இட் இணையவழி வா்த்தகத் தளத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். ரூ.49 கட்டணத்தில் இந்தச் சேவையை வாடிக்கையாளா்கள் பெறலாம்.
அதன் வகையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவை, சென்னையைத் தவிர மேலும் 16 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. விரைவில் பிற ஊா்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.