இன்றைய நிலையற்ற அமர்வில், இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து ஏழாவது அமர்வாக உயர்ந்து முடிந்தது. தகவல் தொழில்நுட்பம், பார்மா மற்றும் ஆட்டோ ஆகிய பங்குகளின் தலைமையில் இந்தப் பயணம் நீடித்தது.
காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 658.96 புள்ளிகள் உயர்ந்து 80,254.55 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 192.05 புள்ளிகள் உயர்ந்து 24,359.30 புள்ளிகளாகவும் இருந்தது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 520.90 புள்ளிகள் உயர்ந்து 80,116.49-ஆகவும் நிஃப்டி 161.70 புள்ளிகள் உயர்ந்து 24,328.95 ஆகவும் நிலைபெற்றது.
நிஃப்டி டாப் 50 குறியீடு 24,300 க்கு மேல் முடிந்த நிலையில், சென்செக்ஸ் டிசம்பர் 2024 க்குப் பிறகு முதல் முறையாக இன்று 80,000 க்கு மேல் சென்று முடிந்தது.
துறை வாரியாக, ஐடி குறியீடு 4 சதவிகிதமும், ஆட்டோ குறியீடு 2 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும், பொதுத்துறை வங்கி, நுகர்வோர் சாதனங்கள் குறியீடுகள் 0.5 முதல் 1 சதவிகிதமாகவும் உயர்ந்தது.
நிஃப்டி-யில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவை சரிவுடன் முடிந்தது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு தலா 1 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு தலா 0.2 சதவிகிதமும் உயர்வுடன் முடிந்தது.
சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் எடர்னல், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் பங்குகள் சரிந்து முடிந்தது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, டோக்கியோவின் நிக்கேய் 225, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தது.
முதலீட்டாளர்கள், வருவாயில் கவனம் செலுத்தியதால், அமெரிக்க பங்குகள் நேற்று (செவ்வாய்கிழமை) சரிவிலிருந்து மீண்டது. அதே நேரத்தில் அமெரிக்க மற்றும் சீனா ஆகியோரின் வர்த்தக பதற்றங்கள் இனி தணியும் என்று நம்புவதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியதையடுத்து டாலர் உயர்ந்தது.
இதற்கிடையில், பெடரல் ரிசர்வின் தலைவரை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, ஐரோப்பிய குறியீடுகள் மற்றும் ஆசிய குறியீடுகள் உயர்ந்து முடிந்தது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெகுவாக ஏற்றம் கண்டது. நாஸ்டாக் காம்போசிட் 2.71 சதவிகிதமும், டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 2.66 சதவிகிதமும், எஸ் அண்ட் பி-500 தலா 2.51 சதவிகிதமும் உயர்ந்தது.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் அக்டோபர் 2021 பிறகு அதன் 4-வது காலாண்டு வருவாயில் அதிக லாபம் ஈட்டியது.
ஒருங்கிணைந்த 4-வது காலாண்டு லாபம் 36.5% உயர்ந்த பிறகு சையண்ட் டிஎல்எம் (Cyient DLM) பங்குகள் 3.5 சதவிகிதம் உயர்ந்தது. பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீர் வங்கி 5 நாள் வெற்றி ஓட்டத்தில் சென்ற நிலையில், தற்போது கிட்டத்தட்ட 9 சதவிகிதம் சரிவில் முடிந்தது.
இருப்பினும், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதையடுத்து விமான மற்றும் ஹோட்டல் பங்குகள் ஆகியவை வெகுவாக சரிந்தது முடிந்தது.
கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், யுபிஎல், அஸ்ட்ராஜெனெகா பார்மா, பார்தி ஹெக்ஸாகாம், லாரஸ் லேப்ஸ், ஜேகே சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏஏவிஏஎஸ் பைனான்சியர்ஸ் உள்ளிட்ட 80 பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.
இதையும் படிக்க: முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி மந்தம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.