வணிகம்

புதிய எலைட்புக், புரோபுக், ஆம்னிபுக் மாடல்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி!

புதிய எலைட்புக், புரோபுக், ஆம்னிபுக் மாடல்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி.

DIN

மடிக்கணினி உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஹெச்பி நிறுவனம் புதிய வகை மாடல்களான எலைட்புக், புரோபுக், ஆம்னிபுக் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

எலைட்புக், புரோபுக் ஆகியவை இண்டெல்கோர் அல்ட்ரா 200வி சீரிஸ் மற்றும் க்வால்காம் செயலிகளால் இயக்கப்படுகின்றன. ஆம்னிபுக்ஸ் இண்டெல் மற்றும் ஏஎம்டியால் இயக்கப்படுகிறது. இந்த மடிக்கணினிகள் அனைத்தும் புதிய வகை செய்யறிவால் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மடிக்கணினிகளின் விலை ரூ.77,200-லிருந்து தொடங்கும் என்று அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்பி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த மடிக்கணினியின் வரிசையில் HP Elite Book 8 G1i, 8 G1a, 6 G1a மற்றும் 6 G1q; HP Pro Book 4 G1q; மற்றும் HP Omni Book Ultra, X Flip, 7 Aero மற்றும் Omni Book 5 ஆகியவை அடங்கும்.

HP Elite Books மற்றும் Pro Books ஆகியவை நிறுவன பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதே வேளையில் Omni Book AI வகை மடிக்கணினிகள் ஃப்ரீலான்ஸர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன . 

ஹெச் அறிமுகம் செய்துள்ள புதிய மடிக்கணினிகளின் விலை

  • HP EliteBook 8 G1i - ரூ.1,46,622

  • HP EliteBook 6 G1q - ரூ.87,440

  • HP ProBook 4 G1q - ரூ.77,200

  • HP Omni Book Ultra 14 - ரூ.1,86,499

  • HP Omni Book X Flip 14 - ரூ.1,14,499

  • HP Omni Book 7 Aero - ரூ.87,499

  • HP Omni Book 5 - ரூ.78,999

இதையும் படிக்க: 6 ஏர்பேக்குகளுடன் ரூ.6 லட்சத்தில் மாருதி சுசூகி ஈக்கோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT