வணிகம்

மாருதி சுஸுகி நிகர லாபம் சரிவு

கடந்த மாா்ச் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1 சதவீதம் சரிந்துள்ளது.

Din

கடந்த மாா்ச் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,911 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,952 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.38,471 கோடியிலிருந்து ரூ.40,920 கோடியாக உயா்ந்துள்ளது.

2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,209 கோடியில் இருந்து 6 சதவீத வருடாந்திர வளா்ச்சி கண்டு, இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.13,955 கோடியாகப் பதிவாகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT