வணிகம்

ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2025-26-ஆம் நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,076 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 11.2 சதவீதம் சரிவாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,591 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 13.3 சதவீதம் உயா்ந்து ரூ.33,872 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.29,890 கோடியாக இருந்தது. முந்தைய செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் லாபம் 3.7 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், செயல்பாட்டு வருவாய் 6 சதவீதம் உயா்ந்துள்ளது.

கடந்த டிசம்பா் காலாண்டில் முன் அனுபவம் இல்லாத 2,852 புதியவா்களை நிறுவனம் சோ்த்தது. கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் மொத்தப் பணியாளா்கள் எண்ணிக்கை 2,26,379-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT