வணிகம்

ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு

Din

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனம் ரூ.7,022 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 25.7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,587 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் ரூ.28,871 கோடியிலிருந்து 17.7 சதவீதம் அதிகரித்து ரூ.33,986 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் செயல்பாட்டு வருவாய் மட்டும் 15.6 சதவீதம் அதிகரித்து ரூ.30,018 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் மணிகளைத் தேக்கமின்றி கொள்முதல் செய்யகோரி விவசாயிகள் சாலை மறியல்!

விழித்துணை.. நடிகை சிரி ஹன்மந்த்

இன்று 16, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

சிக்கனம்... க்ரிதி சனோன்

கண் கனா... ரணாவத்!

SCROLL FOR NEXT