முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.85.25-ஆக முடிவு!

அமெரிக்க டாலரின் மீட்சி மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 85.25 ஆக முடிந்தது.

Updated On : 29 ஏப்ரல், 2025 at 12:16 PM
- PTI Graphics
பகிர்:

மும்பை: அமெரிக்க டாலரின் மீட்சி மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 85.25 ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.06 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.96 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.40 ஐ தொட்ட நிலையில், முடிவில் 2 காசுகள் குறைந்து ரூ.85.25-ஆக முடிந்தது.

நேற்றைய அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ.85.23 ஆக இருந்தது.

இதையும் படிக்க: பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.