புது தில்லி, ஆக.1: கடந்த ஜூலையில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.95 லட்சம் கோடியாக 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக ஜிஎஸ்டி வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு ஜூலையில் நாட்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 1,82,075 கோடியாக இருந்தது. இது நிகழாண்டு ஜூலையில் ரூ.1,95,735 கோடியாக 7.5 சதவீதம் அதிகரித்தது. ரூ.1,95,735 கோடியில் மொத்த உள்நாட்டு வருவாய் ரூ.1,43,023 கோடி, மொத்த இறக்குமதி வருவாய் ரூ.52,712 கோடி.
கடந்த ஆண்டு ஜூலையில் மொத்த ஜிஎஸ்டி ரீஃபண்ட் ரூ.16,275 கோடியாக இருந்தது. இது நிகழாண்டு ஜூலையில் 66.8 சதவீதம் அதிகரித்து ரூ.27,147 கோடியாக உயா்ந்தது.
மாநிலங்கள் அளவில் கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.10,490 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய், நிகழாண்டு ஜூலையில் 8 சதவீதம் அதிகரித்து ரூ.11,296 கோடியாக உயா்ந்தது.
இதேபோல கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.225 கோடியாக இருந்த புதுச்சேரி ஜிஎஸ்டி வருவாய், நிகழாண்டு ஜூலையில் 9 சதவீதம் அதிகரித்து ரூ.245 கோடியாக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.