ஐபோன் 16இ apple
வணிகம்

ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

ஆப்பிள் ஐபோன் 16இ ஸ்மார்ட்போன் தள்ளுபடி பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அமேசானில் ஆப்பிள் ஐபோன் 16இ மாடல் போனின் விலை ரூ. 11,000 குறைவான தள்ளுபடியில் வாங்கலாம்.

அமேசானின் கிரேட் ஃப்ரீடம் விற்பனை அறிவிப்பு வெளியாகி அமேசானில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருள்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்கு அமேசான் ஒரு அதிரடி ஆஃபரை வழங்குகிறது.

அதன்படி, ஐபோன் 16இ(128 ஜிபி) விலை ரூ. 59,900 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அமேசான் தளத்தில் ரூ. 49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஆரம்ப விலையைவிட ரூ.9,901 குறைவாகும்.

இதற்கு அடுத்தபடியாக எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இஎம்ஐ மூலமாக வாங்கும்போது மேலும் ரூ. 1,500 தள்ளுபடி கிடைக்கும். இதனால் ரூ. 48,499-க்கு ஐபோன் 16இ - யை வாங்க முடியும்.

எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய ஸ்மார்ட்போனை வழங்கும்பட்சத்தில் மேலும் ஒரு கணிசமான தொகை குறையும்.

உதாரணமாக ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.13,600 வரை விலை குறையும். இறுதியாக ஐபோன் 16இ விலை ரூ. 34,899 ஆக குறையும்.

ஐபோன்களில் இந்த மாடலின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஓஎஸ் ஆப்பரேடிங் சிஸ்டம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 6.1 இன்ச் திரை, 48எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

Apple iPhone 16e Price By Over RS 11,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT