பங்குச் சந்தை ANI
வணிகம்

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சரிவில் இந்திய பங்குச் சந்தை!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,074.41 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.46 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 302.59 புள்ளிகள் குறைந்து 80,882.99 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 107.55 புள்ளிகள் குறைந்து 24,660.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஐடி துறை, உலோகம், எண்ணெய் & எரிவாயு, பார்மா, பொதுத்துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 0.5 முதல் 1 சதவீதம் வரை சரிந்தன. அதே நேரத்தில் எஃப்எம்சிஜி மற்றும் மீடியா குறியீடுகள் 0.5-2 சதவீதம் உயர்ந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன. பிஎன்பி ஹவுசிங், நெட்வெப், கெய்ன்ஸ் டெக், எம்&எம் ஆகியவை நிஃப்டியில் ஏற்றமடைந்துள்ளன.

சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், ட்ரெண்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, கோட்டக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபத்தைச் சந்தித்து வருகின்றன. அதேநேரத்தில் சன் பார்மா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ்ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாகக் குறைந்துள்ளன.

உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, இந்தியா மட்டுமின்றி பல நாடுகளின் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Stock Market Update: Sensex down 300 pts, Nifty below 24,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது இந்தியா

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் யாதுமானவள் விழா

ஜெய்ஸ்வால், சுதா்சன் அசத்தல்: முதல் நாளில் இந்தியா 318/2

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெல் கொள்முதலை துரிதப்படுத்த வலியுறுத்தி முற்றுகை போராட்டம்

SCROLL FOR NEXT