அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 6 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 4.64 கோடி டன்னாக உள்ளது.
முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 5.5 கோடி டன்னாக இருந்த உற்பத்தியோடு ஒப்பிடுகையில் இது குறைவு.ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிறுவனத்தின் உற்பத்தி 6 சதவீதம் குறைந்து 22.98 கோடி டன்னாக உள்ளது.
முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 24.43 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.