தங்கம் விலை PTI
வணிகம்

ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 600 அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை வார இறுதி நாளான சனிக்கிழமை, சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. ஒரு சவரன் ரூ. 74,320 ஆக விற்பனை செய்யப்பட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று, பெரிய மாற்றமின்றி சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 74,360 -க்கு விற்பனையானது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 9,370 -க்கும் ஒரு சவரன் ரூ. 74,960 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ. 2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 125 -க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,25,000 -க்கும் விற்பனையாகிறது.

The price of gold jewellery in Chennai increased by Rs. 600 per sovereign on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி!

உதகைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்!

இணையத் தொடராகும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்!

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

SCROLL FOR NEXT