PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து மீண்டு, இன்று 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து மீண்டு, இன்று 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவடைந்தது. இதற்கு ரிசர்வ் வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் 'நடுநிலை' நிலைப்பாட்டுடன் இருந்ததே முக்கிய காரணமாகும்.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, எதிர்மறையான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் இந்தியா மீதான அமெரிக்க வரி ஆகியவற்றால் ரூபாயின் லாபம் கட்டுப்படுத்ப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.72 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.87.63 முதல் ரூ.87.80 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73ஆக நிறைவடைந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அதன் இன்ட்ரா-டே அளவை மீண்டும் அடைந்து, டாலருக்கு நிகரான 22 காசுகள் சரிந்து ரூ.87.88 ஆக முடிந்தது.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி? தினப்பலன்கள்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

SCROLL FOR NEXT