புதுதில்லி: ஜேஎம் ஃபைனான்சியல் 2026, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 166 சதவிகிதம் உயர்ந்து ரூ.454 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
நிதிச் சேவை சேர்ந்த இந்த நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.171 கோடி வருவாய் ஈட்டியது.
2025-26 ஜூன் வரையான காலாண்டில் மொத்த வருமானம் ரூ.1,121 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு வருடம் முன்பு இது ரூ.1,093 கோடியாக இருந்தது என்று ஜேஎம் ஃபைனான்சியல் தெரிவித்துள்ளது.
நிதியாண்டு 2025ல் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் ரூ.849 கோடியாக இருந்த மொத்த செலவுகள் ரூ.529 கோடியாகக் குறைந்துள்ளது. அதே வேளையில் காலாண்டில் நிகர மதிப்பு ரூ.10,000 கோடியைத் தாண்டியுள்ளது.
இதையும் படிக்க: பேரிடர் நிவாரணத்திற்கு நன்கொடை அளித்த பொதுத்துறை வங்கிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.