ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு இதுவரை இல்லாத வகையில், ரூ.19,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களையொட்டி இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வாங்க வேண்டும் என நினைத்து, அதிக விலை காரணமாக வாங்காமல் இருப்பவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆப்பிள் உயர் ரக ஸ்மார்ட்போனை சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
சலுகையைப் பெறுவது எப்படி?
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு 2024 முதலே பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் ஐபோன் 17 அறிமுகமாகவுள்ள நிலையில், எஞ்சியுள்ள ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதற்காக விஜய் சேல்ஸ் நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், மின்னணு பொருள்களை நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 1,44,900. தற்போது விஜய் சேல்ஸ் இணைய விற்பனை தளப் பக்கத்தில் ரூ. 15,000 தள்ளுபடியுடன் ரூ. 1,29,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமின்றி எச்.டி.எஃப்.சி வங்கி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கினால், மேலும் ரூ. 4,500 குறையும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 19,500 வரை சேமிக்க முடியும். இதனால் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ. 1,25,400 விலைக்கு வாங்க முடியும்.
அமேசான் இணைய விற்பனை தளத்தில் ரூ.1,33,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | அதிக பேட்டரி திறனுடைய போக்கோ எம் 7! இந்தியாவில் அறிமுகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.