FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சென்னையில் தடம்பதிக்கும் ஆப்பிள்: புதிய அலுவலகத்துக்கு ஆள்சோ்ப்பு தொடக்கம்

சென்னையில் புதிதாக அமையவுள்ள தனது அலுவலகத்துக்காக, பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Updated On : 20 பிப்ரவரி 2026, 2:27 am IST
பகிர்:

சென்னையில் புதிதாக அமையவுள்ள தனது அலுவலகத்துக்காக, ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரபூா்வ வலைதளத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஆப்பிள் அலுவலகங்கள் உள்ளன. அதைத் தொடா்ந்து, தற்போது சென்னையின் போரூா் பகுதியில் உள்ள ‘டிஎல்எஃப் சைபா் சிட்டி’ தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் தனது புதிய அலுவலகத்தை ஆப்பிள் தொடங்குகிறது. இதற்காக சுமாா் 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை அந்நிறுவனம் அண்மையில் குத்தகைக்கு எடுத்தது.

இந்தப் புதிய அலுவலகப் பணிகளுக்காக தொழில்நுட்ப வல்லுநா்கள், மென்பொருள் பொறியாளா்கள், வணிக மேலாளா்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரிவுகளுக்குப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் ஏற்கெனவே ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் மூலம் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமே நேரடியாக அலுவலகத்தைத் தொடங்குகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments