நிசான் கார் நிறுவனம் மேக்னைட் குரோ வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் ஆண்டுக்கு 3 புதிய கார்கள் வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 9 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.
குரோ என்றால் ஜப்பானிய மொழியில் கருப்பு. ஏற்கெனவே, மேக்னைட் ஃபேஸ்லிப்ட் குரோ வேரியண்டை நிசான் நிறுவனம் விற்பனை செய்து, பின்னர் நிறுத்தியது.
இந்த நிலையில், தற்போது நிசான் மேக்னைட் என்-கனெட்டா வேரியண்டை அடிப்படையாகக் கொண்டு மேக்னைட் குரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேபின், டேஷ் போர்டு, ஸ்டீரிங் வீல், கன்சோல், கூரை, பம்பர், சக்கரங்கள் என அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தில் உள்ளன.
மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 71 குதிரை திறனை வெளிப்படுத்தும். இதேபோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் அதிகபட்சமாக 98 குதிரை திறனை வெளிப்படுத்தும்.
டுயல் டிஜிட்டர் தொடு திரை, அர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் பின்புற கண்ணாடி, பின்புற இருக்கைகளுக்கு ஏசி வெண்ட்கள், கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த காரின் தொடக்க விலை ரூ. 8.31 லட்சமாகவும் டாப் வேரியண்ட்டின் விலை ரூ. 10.97 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 11,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.