வணிகம்

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் வரையான காலாண்டில் 42% உயர்ந்து ரூ.4,637 கோடியாக உள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் வரையான காலாண்டில் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,637 கோடியாக உள்ளது. அதே வேளையில், நிறுவனம் தனது வலுவான வீட்டுவசதி தேவையை பூர்த்தி செய்ய தனது வணிகத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இறுதியில் நிறுவனத்தின் நிகர கடன் ரூ.3,269 கோடியாக இருந்தது.

அதன் சமீபத்திய முதலீட்டாளர்களின் கூட்டத்தில், நிறுவனத்தின் கடன் பங்கு 0.19 சதவிகிதத்திலிருந்து 0.26 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதி ரீதியாக, கோத்ரெஜ் பிராபர்டீஸ் சமீபத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 15 சதவிகிதம் அதிகரித்து ரூ.598.40 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.518.8 கோடியாக இருந்தது.

மொத்த வருமானம், 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் ரூ.1,620.34 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ.1,699.48 கோடியாக இருந்தது.

மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ.6,967.05 கோடி மொத்த வருமானத்தில் ரூ.1,389.23 கோடி நிகர லாபமாக பதிவு செய்தது.

இதையும் படிக்க: இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தாரை தாக்கினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்! டிரம்ப்

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

காந்தி, காமராஜர் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்: கே.அண்ணாமலை

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

SCROLL FOR NEXT