தொடர்ந்து 4-வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(ஆக. 21) காலை 82,220.46 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 332.59 புள்ளிகள் அதிகரித்து 82,190.43 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.95 புள்ளிகள் உயர்ந்து 25,132.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் நிஃப்டி 25,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்ற நிலையில் நேற்று 25,000-யைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ், கோடாக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் பங்குகள் முக்கிய லாபத்தைப் பெற்றன. பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் 1.64 சதவீதம் வரை உயர்ந்தன.
அதேநேரத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், எடர்னல், சன் பார்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன. தொடக்கத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 0.55 சதவீதம் சரிந்தது.
ஆசிய சந்தைகளைப் பொருத்தவரை ஜப்பானின் நிக்கேய் 225, 230.55 புள்ளிகள் அல்லது 0.54 சதவீதம் சரிந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங் 81.94 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. மறுபுறம் தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காய் பங்குச்சந்தைகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.