வணிகம்

சுஸுகி 2 சக்கர வாகன விற்பனை சரிவு

தினமணி செய்திச் சேவை

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 2.7 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,13,600-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2.7 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 1,16,714 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 4.5 சதவீதம் குறைந்து 96,029-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,00,602-ஆக இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 16,112-லிருந்து 17,571-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் விசாரிப்பு

ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!

"கடக ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப்பிடித்த காவல் துறை!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

SCROLL FOR NEXT