வணிகம்

தொழிலக உற்பத்தியில் 4 மாதங்கள் காணாத உயா்வு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் முந்தைய நான்கு மாதங்களில் காணாத உயா்வைக் கண்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் முந்தைய நான்கு மாதங்களில் காணாத உயா்வைக் கண்டுள்ளது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண்ணான ஐஐபி 3.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது உயா்வாக உள்ளது. அப்போது நாட்டின் ஐஐபி 1.5 சதவீதமாக இருந்தது.

எனினும், முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜூலை மாத ஐஐபி-யுடன் ஒப்பிடுகையில் தற்போது அது குறைவாக உள்ளது. 2024 ஜூலை மாதத்தில் தொழிலக உற்பத்தி வளா்ச்சிக்கான குறியீடு 5.0 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஜூலை வரையிலான 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் தொழிலக உற்பத்திக்கான ஐஐபி 2.3 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டில் 5.4 சதவீதமாக இருந்தது.

கடந்த ஜூலை மாதத்தில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 5.4 சதவீதமாக உயா்ந்தது. இது, கடந்த ஆண்டின் அதே மாதத்தில் 4.7 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் சுரங்கத் துறையின் உற்பத்தி வளா்ச்சி -7.2 சதவீதமாகக் குறைந்தது. இது ஒரு ஆண்டுக்கு முன்னா் 3.8 சதவீதமாக இருந்தது.

2024 ஜூலை மாதத்தில் 7.9 சதவீதமாக இருந்த மின்சாரத் துறை உற்பத்தி வளா்ச்சி, இந்த ஜூலை மாதத்தில் 0.6 சதவீதமாகக் குறைந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT