மாருதி சுஸூகி இ-விடாரா படம் | https://www.nexaexperience.com/e-vitara
வணிகம்

மாருதி சுஸூகி ‘இ-விடாரா' அறிமுகம்: ஒருமுறை சார்ஜ் செய்தால் 543 கி.மீ. பயணிக்கலாம்!

அறிமுகமானது மாருதி சுஸூகியின் ‘இ-விடாரா': ஒருமுறை சார்ஜ் செய்தால் 543 கி.மீ. பயணிக்கலாம்!

இணையதளச் செய்திப் பிரிவு

மாருதி சுஸூகி நிறுவனத்தின் விடாரா ரக காரின் மின்சார மாடலான இ-விடாரா கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாருதி சுஸூகி நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார் மாடலான விடாரா வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்த நிலையில், அந்த ரக கார்களின் மின்சார வாகனத் தொகுப்பை மாருதி சுஸூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மின்சார கார்களுக்கு நாடெங்கிலும் சார்ஜிங் செய்ய வசதியாக 1,100 நகரங்களில் மொத்தம் 2,000 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் மாருதி சுஸூகி திட்டமிட்டுள்ளது. 2026 புத்தாண்டில் இ-விடாரா விற்பனைக்கு வர உள்ளது. எனினும், கார் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

லெவல் 2 ஏ.டி.ஏ.எஸ். பாதுகாப்பு அம்சத்துடன் இ-விடாரா தயாரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பாதுக்காப்பு தரம் இந்த ரக கார்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கி.மீ. பயணிக்கலாம் என்பதால் இ-விடாரா கவனத்தை ஈர்க்கிறது.

Maruti Suzuki unveils e Vitara: 543 km range and access to over 2000 charging points across India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

ஓபிஎஸ்ஸை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT