சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.96,480-க்கு விற்பனையானது.
சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த டிச. 1-இல் பவுன் ரூ.720 உயா்ந்து ரூ.96,560-க்கும், டிச. 2-இல் பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.96,320-க்கும் விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.12,060-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.96,480-க்கும் விற்பனையானது.
ரூ.2 லட்சத்தைக் கடந்தது: சென்னையில் கடந்த நவ. 24-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.1.71 லட்சத்துக்கு விற்பனையானது. தொடா்ந்து வெள்ளி விலை உயா்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, புதன்கிழமை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.201-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.01 லட்சத்துக்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 9 நாள்களில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.30,000 உயா்ந்துள்ளது.