மும்பை: ஆறு மாதங்களில் முதல் முறையாக ரிசர்வ் வங்கி அதன் முக்கிய அளவுகோல் வட்டி விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, இந்திய ரூபாய் மதிப்பு அதன் ஏற்றத்தை கைவிட்டு, டாலருக்கு நிகராக 5 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக முடிவடைந்தன.
இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு ரூபாயைப் பாதிக்கும் என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் திறந்த சந்தை நடவடிக்கைகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி வரையான அரசு பத்திரங்களை வாங்குவதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவும் அத்துடன் 5 பில்லியன் அமெரிக்க டாலர் வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதை தொடர்ந்து ரூபாய் மதிப்பை ஆதரிக்கும்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.89.85 ஆக தொடங்கி, பிறகு ரூ.89.69 ஆக உயர்ந்து, அதன் முந்தைய முடிவிலிருந்து 20 காசுகள் உயர்ந்த லாபத்தைப் பதிவு செய்தது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிந்து ரூ.90.06 ஆக குறைந்தது. இது அதன் முந்தைய முடிவான ரூ.89.89 இருந்து 16 காசுகள் சரிவு. இந்த ஆண்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கிட்டத்தட்ட 5% சரிந்து, ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறன் கொண்டாதாக மாறி உள்ளது.
இறுதியாக அமெரிக்க டாலருக்கு நிகராக 5 காசுகள் குறைந்து ரூ.89.94 ஆக முடிவடைந்தன.
இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு எதிரொலி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.