தென் கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ், தனது சொகுசு வகை தயாரிப்பான புதிய கியா செல்டோஸ் காரை டிசம்பர் 10 அன்று இந்தியச் சந்தைகளில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
கியா தனது இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலின் உலகளாவிய வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி காரானது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் முதல் முறையாக ஹைப்பிரிடு பவர்டிரெய்ன் போன்றவை கொண்டுவருகிறது.
புதுப்பிப்புகள் என்னென்ன?
டீசரில் புதிய டெயில் லேம்ப் வடிவமைப்பு, கனெக்டர் லைட் பார், வலிமையான பின்புற பம்பர், புதிய அலாய் வீல்கள், எல்இடி டீஆர்எல்கள் அடங்கும். செல்டோஸின் பழைய மாடலுடன் ஒப்பிடும்போது பெரியதாகவும், கூர்மையானதாகவும் அதிக பிரீமியம் தோற்றத்தையும் இது வழங்குகின்றன.
காரின் உட்புற அம்சங்கள்
உள்ளமைப்பிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய செல்டோஸில் மேம்பட்ட டாஷ்போர்டு அமைப்பு, புதிய கேபின், பெரிய திரைகள் போன்ற கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கலாம்.
முக்கியமாக 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் +12.3 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் கொண்ட வளைந்த டூயல் ஸ்கிரீன் அமைப்பு போன்ற கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது. டீஸர்கள் ஹெட்லேம்ப்கள் மற்றும் DRLகளுக்கான பனோரமிக் சன்ரூஃப் மற்றும் அனிமேஷன் செய்யப்பட்ட லைட்டிங் காட்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றன.
புதிய செல்டோஸ் தற்போதைய 4,365 மிமீ நீளத்தை விட அதிக நீளத்துடன் காணலாம். அதேசமயம் அகலமும் அதிகரிக்கலாம். பின்புற லெக்ரூம், ஷோல்டர் ஸ்பேஸ் ஆகியவை அதிகரித்துள்ளது.
பவர்டிரெய்ன்
இந்தியாவில் கிடைக்கும் பவர்டிரெய்ன் விருப்பங்களில் பெரிய மாற்றம் இருக்காது. 1.5 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் தொடரும். இந்த காரில் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் விருப்பமும் அறிமுகப்படுத்தலாம். டீசல் பதிப்பில் முதல்முறையாக 7 வேக தானியங்கி கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய கியா செல்டோஸ் 2026 ஆம் ஆண்டிற்கான பிராண்டின் மிக முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. இது அதிக அளவிலான பிரீமியம் அம்சங்களும், தொழில்நுட்ப வசதிகளும் சேர்ந்து எஸ்யூவி சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.