குறைந்த விலை, நிறைந்த தரம்! லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
5000mAh பேட்டரி திறன் மற்றும் 4K கேமரா அம்சங்கள் இதன் சிறப்புகளாக பார்க்கப்படுகிறது.
லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 5000mAh பேட்டரி திறன் மற்றும் 4K கேமரா அம்சங்கள் இதன் சிறப்புகளாக பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லாவா நிறுவனம், இந்திய பயனர்களுக்கு ஏற்ப குறைந்த விலையில் நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
அந்தவகையில் தற்போது லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
லாவா பிளே மேக்ஸ் சிறப்பம்சங்கள்
லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.72 அங்குல முழு எச்.டி., திரை கொண்டது.
திரை பயன்படுத்த சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 புராசஸர் உடையது.
ஆன்டிராய்டு15 இயங்குதளம் கொண்டது.
பயன்பாட்டின்போது ஸ்மார்ட்போன் வெப்பமாவதை தடுக்கும் வகையில் வெப்பத் தணிப்பான்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
6GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 12,999
8GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 14,999
இதையும் படிக்க | ரெட்மி நோட் 15 5ஜி அறிமுகமாகும் தேதி அறிவிப்பு!
Lava Play Max smart phone Launched in India Price and Specifications
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.