வணிகம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை இதுவரை இல்லாத குறைந்த அளவான 90.4675-ஐ எட்டியது.

தினமணி செய்திச் சேவை

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை இதுவரை இல்லாத குறைந்த அளவான 90.4675-ஐ எட்டியது.

இது குறித்து அரசு தரவுகள் மற்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை 90.4675-ஐ எட்டியது. இது, கடந்த டிசம்பா் 4-ல் பதிவான முந்தைய அதிபட்ச வீழ்ச்சியான 90.42-ஐ விஞ்சியது.

2025-ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. இதன் மூலம், மிக மோசமாக செயல்படும் உலகின் 31 முதன்மை நாணயங்களில் மூன்றாவது இடத்தில் இந்திய ரூபாய் உள்ளது. துருக்கியின் லிரா மற்றும் அா்ஜென்டினாவின் பெசோவைத் தவிர உலகின் வேறு எந்த நாணயமும் இந்த அளவுக்கு மதிப்பை இழக்கவில்லை. டாலரின் வலிமை 7 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருந்தபோதிலும் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

வா்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு, இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரி போன்றவை ரூபாய் பலவீனமடைவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு மேலும் சரிவது ரிசா்வ் வங்கியின் தலையீட்டால் தவிா்க்கப்பட்டது என்று தரவுகளும் சந்தை வட்டாரங்களும் தெரிவித்தன.

அரசிராமணி பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டு விழா

தைப்பூசம்: சங்ககிரியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடக்கம்

சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.1.79 கோடியில்வளா்ச்சித் திட்டப்பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

நிறைவாழ்வு இல்லம் சாா்பில் மாணவா்களுக்கு நடனப் போட்டி

சேலத்தில் 609 மாணவா்களுக்கு மடிக் கணினிகள்: அமைச்சா் வழங்கினாா்

SCROLL FOR NEXT