புதுதில்லி: ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 17 வரையிலான காலகட்டத்தில், நிகர நேரடி வரி திரும்ப வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தால், வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடி உயர்ந்ததாக வருமான வரி துறை இன்று அறிவித்துள்ளது.
இதில் ரூ.8.17 லட்சம் கோடிக்கு அதிகமான கார்ப்பரேட் வரியும், ரூ.8.47 லட்சம் கோடி கார்ப்பரேட் அல்லாத வரியும் இதில் அடங்கும்.
நடப்பு நிதியாண்டில், டிசம்பர் 17ஆம் தேதி வரையான, பத்திர பரிவர்த்தனை வரியிலிருந்து கிடைத்த வருவாய் ரூ.40,195 கோடியாக இருந்தது. அதே வேளையில், கடந்த ஆண்டை காட்டிலும் பணத்தை திரும்ப வழங்குவது 14% குறைந்து, ரூ.2.97 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது.
வருமான வரித் துறை தரவுகளின் அடிப்படையில், பணத்தைத் திரும்ப செலுத்துவதை சரிசெய்வதற்கு முன், மொத்த நேரடி வரி வசூல் டிசம்பர் 17ஆம் தேதி வரை 4.16% வளர்ச்சியடைந்து ரூ.20.01 லட்சம் கோடியை கடந்தது.
நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் முந்தைய ஆண்டை விட 12.7% அதிகரித்து, ரூ. 25.20 லட்சம் கோடியாக இருக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது.
2026 நிதியாண்டில் பத்திர பரிவர்த்தனை வரியிலிருந்து சுமார் ரூ.78,000 கோடி வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையும் படிக்க: ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.