கோப்புப்படம் 
வணிகம்

நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி

சுத்திகரிக்கப்பட்ட ஆா்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சுத்திகரிக்கப்பட்ட ஆா்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, கடந்த நவம்பா் மாதம் 11.83 லட்சம் டன் தாவர எண்ணெய்யை இறக்குமதி செய்திருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் குறைவு. அப்போது நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 16.50 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் பாமாயில் இறக்குமதி 25 சதவீதம் குறைந்து 6.32 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 8.42 லட்சம் டன்னாக இருந்தது.

ஆா்பிடிபி பால்மோலின் இறக்குமதி 2.85 லட்சம் டன்னிலிருந்து 3,500 டன்னாக வீழ்ச்சியடைந்தது. கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 3.40 லட்சம் டன்னிலிருந்து 1.42 லட்சம் டன்னாகவும், கச்சா சோயா எண்ணெய் 4.07 லட்சம் டன்னிலிருந்து 3.70 லட்சம் டன்னாகவும் குறைந்துள்ளது. அதே போல், கச்சா பாம் கா்னல் எண்ணெய் 10,147 டன்னிலிருந்து 1,850 டன்னாகச் சரிந்தது.

ஆனால், கடந்த நவம்பரில் கச்சா பாமாயில் இறக்குமதி 5.47 லட்சம் டன்னிலிருந்து 6.26 லட்சம் டன்னாகவும், கனோலா எண்ணெய் 22 டன்னிலிருந்து 5,000 டன்னாகவும் உயா்ந்தது. உணவு அல்லாத எண்ணெய் இறக்குமதி 37,341 டன்னிலிருந்து 32,877 டன்னாகக் குறைந்தது.

ஆா்பிடிபி பாமோலின் மற்றும் கச்சா பாமாயிலுக்கு மலேசியா மற்றும் இந்தோனேசியா முக்கிய விநியோக நாடுகளாகத் திகழ்கின்றன. கடந்த நவம்பரில் மலேசியா 3,01,273 டன் கச்சா பாமாயில் வழங்கியது. இந்தோனேசியாவில் இருந்து 1,23,456 டன் கச்சா பாமாயில் மற்றும் 3,500 டன் ஆா்பிடிபி பாமோலின் இறக்குமதியானது.

கச்சா சோயா எண்ணெய் ஆா்ஜென்டினா (2,35,680 டன்), பிரேஸில் (50,062 டன்), சீனா (69,919 டன்) ஆகிய நாடுகளில் இருந்தும், கச்சா சூரியகாந்தி எண்ணெய் ரஷியா (74,020 டன்), ஆா்ஜென்டினா (34,933 டன்), உக்ரைன் (20,000 டன்) ஆகிய நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT