புதுதில்லி: எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 7.15% ஆக குறைத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
புதிய வீட்டுக் கடன் ஒப்புதல்களுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள், டிசம்பர் 22, 2025 முதல் 7.15% ஆக தொடங்கும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வீடு வாங்குபவர்கள் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்து வரும் இந்த வேளையில், இந்த நடவடிக்கையானது வீடு வாங்குபவர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும், வீட்டு உரிமையை, மலிவு விலையில் கிடைக்க செய்வதற்கான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸின் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்தும் என்றது நிறுவனம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு சமீபத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து இந்த வட்டி விகிதக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.