வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,145.90 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 477.11 புள்ளிகள் அதிகரித்து 85,406.47 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 167.55 புள்ளிகள் உயர்ந்து 26,133.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்த நிலையில் இந்த வாரம் முதல் நாளே ஏற்றம் கண்டு வருகிறது.
ஐடி மற்றும் உலோகத் துறைப் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தைகள் நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன.
இன்போசிஸ், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ் பிவி, டிரெண்ட் ஆகியவை சென்செக்ஸில்அதிக லாபம் ஈட்டிய பங்குகளாக உள்ளன.
அல்ட்ராடெக் சிமென்ட், பவர் கிரிட் ஆகியவை அதிக நஷ்டமடைந்த பங்குகளாகும் .
துறைவாரியாக, நிஃப்டி ஐடி, மெட்டல் குறியீடுகள் தலா 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து அதிக லாபத்தை ஈட்டியுள்ளன. மீடியா, நுகர்வோர் பொருள்கள் குறியீடுகளும் முன்னேற்றம் அடைந்துள்ளன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.6 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 0.67 சதவீதமும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.