கோப்புப் படம் 
வணிகம்

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் கடும் சரிவு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) காலை நிலவரப்படி சற்றே உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,533.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.35 மணியளவில் சென்செக்ஸ் 55.55 புள்ளிகள் அதிகரித்து 85,580.40 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.90 புள்ளிகள் உயர்ந்து 26,205.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

2 நாள்கள் உயர்வுக்குப் பிறகு நேற்று பங்குச்சந்தைகள் சரிவடைந்த நிலையில் இன்று ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி வர்த்தகமாகி வருகின்றன.

சென்செக்ஸ் பங்குகளில் என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ட்ரென்ட், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. இதனிடையே இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக் போன்ற தகவல் தொழில்நுட்பப் பங்குகள் அதிக இழப்பைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.12 சதவீதமும் ஸ்மால்கேப் 100 குறியீடு 0.27 சதவீதமும் அதிகரித்தது.

நிஃப்டி ரியல் எஸ்டேட், உலோகம், தனியார் வங்கி குறியீடுகள் முறையே 0.48 சதவீதம், 0.47 சதவீதம், 0.3 சதவீதம் உயர்ந்தன. இருப்பினும், நிஃப்டி ஐடி குறியீடு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

Stock Market: Nifty, Sensex move in narrow range

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் விஜய்யின் ரெட்ட தல பட முன்னோட்ட விடியோ!

ஹரியாணாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலை! அமித் ஷா திறந்து வைத்தார்!

அமமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? TTV தினகரன் விளக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 24.12.25

பிரியங்காவுக்குள் ஒரு இந்திரா காந்தியை மக்கள் பார்க்கின்றனர்: ராபர்ட் வதேரா

ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்ற ஓஸ்வால் பம்ப்ஸ்!

SCROLL FOR NEXT