பஜாஜ் நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட பல்சர் 220 எஃப் ரக பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
இளைஞர்களைக் கவர்ந்த மிகவும் பிரபலமான மாடல்களின் ஒன்றான பல்சர் பைக், எல்இடி இண்டிகேட்டர், புதிய வண்ணங்கள் என மேம்படுத்தப்பட்ட சிறப்பங்களுடன் சந்தைக்கு வந்துள்ளது.
220 சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு தொழில்நுட்பத்துடன் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8,500 ஆர்பிஎம்மில் 20.4 ஹெச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 18.5 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
5 கியர் பாக்ஸுடன் விற்பனைக்கு வந்துள்ள பல்சர் 220 எஃப் பைக்கில், எல்இடி இண்டிகேட்டர், ப்ளூடூத் இணைப்பு, நேவிகேஷன் அடங்கிய டிஜிட்டல் கன்சோல் இடம்பெற்றுள்ளது.
பிளாக் செரி ரெட், பிளாக் இங்க் ப்ளூ, பிளாக் காப்பர் பீஜ் மற்றும் கிரீன் லைட் காப்பர் ஆகிய நான்கு கிராபிக்ஸ் வண்ணங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் விலை ரூ. 1.28 லட்சம் (எக்ஸ் ஷோரூம்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.