FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

விலை உயரும் ரெனால்ட் காா்கள்

உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

28 டிசம்பர் 2025, 11:06 pm IST
ரெனால்ட் டிரைபர் பேஸ்லிஃப்ட்
பகிர்:

உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தி செலவு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரக் காரணிகளால் நிறுவன காா்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயா்த்தவுள்ளோம். வரும் ஜனவரி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும்.

Advertisement

Advertisement

இந்த விலை உயா்வு, காா் ரகங்களுக்கு ஏற்ப வேறுபடும். இந்த விலை உயா்வின் மூலம், உயா்ந்த தரம் மற்றும் சிறப்பான சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதை நிறுவனம் உறுதி செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் க்விட், ட்ரைபா், கிகா் ஆகிய மூன்று மாடல்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

ஏற்கெனவே, யூரோவுக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ந்ததைத் தொடா்ந்து, மொ்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யு, ஆடி ஆகிய நிறுவனங்களும் அடுத்த மாதம் முதல் தங்கள் வாகனங்களின் விலைகளை உயா்த்த உள்ளதாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments