புதுதில்லி: மத்திய அரசு அறிவிப்பின்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் 50,000 டன் வரை இயற்கை சர்க்கரை (organic sugar) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த ஏற்றுமதியானது வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் விதிகளுக்கு உட்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளின்படி, ஒரு நிதியாண்டிற்கு 50,000 டன் என்ற ஒட்டுமொத்த உச்சவரம்பிற்கு உள்பட்டு இயற்கை சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.