ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
இதனுடைய மேம்படுத்தப்பட்ட தோற்றம் பிரீமியம் வரிசையிலான ஸ்மார்ட்போன் சிறப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 2026 ஜனவரி 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள சிப்செட்கள் இந்த ஸ்மார்ட்போனிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 7 வரிசையில் இது மிகவும் சீரான செயல்பாடுகொண்டது.
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள்
1.5K அமோலிட் தொடுதிரை உடையது. பயன்படுத்துவதற்கு திரை சுமூகமாக இருக்கும் வகையில் 144Hz திறன் கொண்டது.
ஆன்டிராய்டு 16 UI 7 கொண்டது.
வடிவமைப்பு மற்றும் கேமரா ஹார்ட்வேரில் அதிக நாட்டம் செலுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும்.
200MP முதன்மை கேமரா மற்றும் சாம்சங் HP5 சென்சார் கொண்டது. 50MP டெலிபோட்டோ சென்சார் உடையது.
7000mAh பேட்டரி திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 9.3 மணிநேரத்திற்கு கேம் விளையாடலாம்.
தூசி மற்றும் நீர்புகாத்தன்மைக்காக IP69 திறன் கொண்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இதன் விலை ரூ. 35,999. எனினும் வெளியாகும்போது இதைவிட கூடுதலாக தொகைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.