வணிகம்

ஈவுத்தொகையாக ரூ.35.3 கோடியை அறிவித்த தேசிய விதைகள் கழகம்!

அரசுக்கு சொந்தமான தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.

வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான தேசிய விதைகள் கழகம், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை வழிகாட்டுதல்களுக்கு இணங்க, 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.

ஈவுத்தொகையை காசோலையை தேசிய விதைகள் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மணீந்தர் கெளவுர் திவேதி, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானிடம் வழங்கினார்.

விவசாயிகளுக்கு எப்போதும் நல்ல தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சௌஹான், இந்த இயக்கத்தில் தேசிய விதைகள் கழகம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: உலகளாவிய வங்கிக்கு விண்ணப்பித்த உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT