டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.50 ஆக முடிவு!
இன்றை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு எந்தவித மாற்றமின்றி ரூ.87.50 ஆக முடிந்தது.
மும்பை: இன்றை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு எந்தவித மாற்றமின்றி ரூ.87.50 ஆக முடிந்தது. இருப்பினும் இந்திய ரூபாய் 88.00-ஐ நெருங்கியதால் வர்த்தகளிடையே டாலர் வாங்கும் ஆர்வம் வெகுவாக வெளிப்பட்டது.
அமெரிக்க அதிபரின் கட்டண உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, இந்திய ரூபாய் மீது அழுத்தம் மேலும் எடைபோட்டது. பிறகு ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் இந்திய ரூபாய் 87.50- ஆக நிலைபெற்றது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது 25 சதவிகித கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கும் நாடுகளை குறிவைத்து பரஸ்பர கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.94 ஆக தொடங்கி, பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.95 ஆகவும் சரிந்து, முடிவில் எந்தவித மாற்றமின்றி தட்டையாக ரூ.87.50ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: 4வது நாளாகச் சரிந்த பங்குச் சந்தை! அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.