முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிவு! ரூ. 85.73

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 9 காசுகள் சரிந்து ரூ. 85.73 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:08 AM
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 2) 9 காசுகள் சரிந்து ரூ. 85.73 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் டாலருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் இந்திய சந்தைகளில் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்றைய வர்த்தக நேர தொடக்கத்திற்கு பிறகு இந்திய ரூபாய் 85.79 ஆக வணிகமானது. படிப்படியாக ரூபாய் மதிப்பு உயர்ந்து ரூ. 85.68 ஆக இருந்தது.

எனினும் வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு ரூ. 85.73 காசுகளாக நிர்ணயமானது. இது நேற்றைய வணிகத்துடன் ஒப்பிடுகையில் 9 காசுகள் சரிவாகும்.

புதன்கிழமையான நேற்று, ரூபாய் மதிப்பு ரூ. 85.64 காசுகளாக இருந்தது. கடந்த டிசம்பர் 27ஆம் தேதி இதுவரை இல்லாத வகையில் சரிந்து ரூ. 85.80 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை

78,657.52 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு மேல் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 1,436.30 புள்ளிகள் உயர்ந்து 79,943.71 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 445.75 புள்ளிகள் உயர்ந்து 24,188.65 புள்ளிகளில் முடிந்தது.

இதையும் படிக்க | ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் உயர்வு!

முழு கட்டுரையைப் படிக்க →