nhai 
வணிகம்

ரூ.56,000 கோடி கடனை முன்னதாகச் செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

நடப்பு நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.56 ஆயிரம் கோடி முன்னதாகச் தவணை செலுத்தி, ரூ.1,200 கோடி வட்டியை மிச்சப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: நடப்பு நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.56 ஆயிரம் கோடி முன்னதாகச் தவணை செலுத்தி, ரூ.1,200 கோடி வட்டியை மிச்சப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மொத்த கடன் ரூ.3.35 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் முடிவில் சுமார் ரூ.2.76 லட்சம் கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல்

உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை வருமானத்திலிருந்து சுமார் ரூ.15,700 கோடி முன்னதாகச் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் தேசிய சிறு சேமிப்பு நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வுக்கு ரூ.10,000 கோடி ஆக மொத்தம் ரூ.40,000 கோடி முன்கூட்டியே கடன் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது தனது கடன் பொறுப்பை வெற்றிகரமாக குறைத்து வருகிறது என்றார் அந்த அரசு அதிகாரி.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 2024-25 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.1.68 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதய்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயம்

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... டெல்னா டேவிஸ்!

SCROLL FOR NEXT