முகப்பு
வணிகம்

கடும் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 6) பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

Updated On : 6 ஜனவரி, 2025 at 7:16 AM
பகிர்:

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 6) பங்குச்சந்தை கடும் சந்தித்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
79,281.65 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

நண்பகல் 12 மணிக்கு சென்செக்ஸ் 1,222.19 புள்ளிகள் குறைந்து 78,000.92 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 397.45 புள்ளிகள் குறைந்து 23,607.30 புள்ளிகளில் உள்ளது.

இதையும் படிக்க | சட்டப்பேரவையில் நடந்தது என்ன? - அப்பாவு பேட்டி

கடந்த வாரம் ஜன. 1, 2 இரு நாள்கள் பங்குச்சந்தை ஏற்றம் அடைந்த நிலையில் ஜன. 3 வெள்ளிக்கிழமை சரிவைச் சந்தித்தது, தொடர்ச்சியாக இன்றும் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

பஜாஜ் பைனான்ஸ், டைட்டன், அப்போலோ, எல்&டி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் ஏற்றம் கண்ட நிலையில் ஐடிசி, டாடா ஸ்டீல், கோட்டக் மஹிந்திரா பேங்க் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →