வணிகம்

பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்

ஜொ்மனியை சோ்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி காா்களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

DIN

ஜொ்மனியை சோ்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி காா்களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024-ஆம் ஆண்டு முழுவதும் குழுமம் 15,721 காா்களை விற்பனை செய்துள்ளது. இது, நிறுவனத்தின் இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும். முந்தைய 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு நிறுவன விற்பனை 11 சதவீதம் உயா்ந்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யு காா்களின் விற்பனை 15,012-ஆகவும் மினி காா்களின் விற்பனை 709-ஆகவும் உள்ளது.

இது தவிர 8,301 பிஎம்டபிள்யு மோட்டோராட் மோட்டாா்சைக்கிள்களையும் குழுமம் விற்பனை செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கும்பகோணத்தில் இரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 போ் கைது!

வரி விதிப்பு எச்சரிக்கை: "பிரிக்ஸ்' கூட்டமைப்பில் சேராமல் பல நாடுகள் விலகல்; அமெரிக்க அதிபர் டிரம்ப்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து: ம.பி.யில் மேலும் இரு குழந்தைகள் இறப்பு; உயிரிழப்பு 24-ஆக அதிகரிப்பு

குழந்தைகள் உரிமைகளை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர் பதவி: 7-ஆவது முறையாக இந்தியா தேர்வு

SCROLL FOR NEXT