முகப்பு
வணிகம்

2வது நாளாக உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 224 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்திருந்தன.

Updated On : 15 ஜனவரி, 2025 at 12:59 PM
கோப்புப் படம்
பகிர்:

பங்குச் சந்தை வணிகம் இரண்டாவது நாளாக இன்று (ஜன. 15) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 224 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்திருந்தன.

ரியாலிடி மற்றும் ஐடி துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எனினும் ஆற்றல், பார்மா, ஆட்டோ துறை பங்குகள் சரிவுடன் இருந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 224.45 புள்ளிகள் உயர்ந்து 76,724.08 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.29 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.15புள்ளிகள் உயர்ந்து 23,213.20 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.16 சதவீதம் உயர்வாகும்.

19 நிறுவனப் பங்குகள் உயர்வு

வணிக நேரத் தொடக்கத்தில் 240 புள்ளிகள் வரை உயர்ந்து 76,900 புள்ளிகளுடன் சென்செக்ஸ் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 76,991 புள்ளிகள் வரை உயர்ந்தது.

இதேபோன்று 76,479 என்ற அதிகபட்ச சரிவையும் பதிவு செய்தது. வணிக நேர முடிவில் 224 புள்ளிகள் உயர்ந்து 76,724 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியல் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 11 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக சொமாட்டோ நிறுவனப் பங்குகள் 4.41% வரை உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக என்டிபிசி 3.53%, பவர் கிரிட் 2.90%, கோட்டாக் வங்கி 2.23%, மாருதி சுசூகி 1.76% உயர்ந்திருந்தன.

இதேபோன்று எம்&எம் -2.93%, பஜாஜ் ஃபின்சர்வ் -2.45%, ஆக்சிஸ் வங்கி -2.37%, பஜாஜ் ஃபைனான்ஸ் -2.15%, டாடா மோட்டார்ஸ் -0.90%, நெஸ்ட்லே இந்தியா -0.88% சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டி நிலவரம்

நிஃப்டியைப் பொறுத்தவரை வணிக நேரத் தொடக்கத்தில் 23,250 புள்ளிகளுடன் தொடங்கியது. முற்பாதியில் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 23,293 புள்ளிகள் வரை சென்றது. எனினும் பிற்பாதியில் சற்று சரிந்து அதிகபட்சமாக 23,146 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 37 புள்ளிகள் உயர்ந்து 23,213 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எஸ்பிஐ லைஃப், பிபிசிஎல், எச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.

துறை ரீதியாக ரியாலிடி மற்றும் ஐடி துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எனினும் ஆற்றல், பார்மா, ஆட்டோ துறை பங்குகள் சரிவுடன் இருந்தன.

நடுத்தர குறியீட்டு நிறுவனங்கள் 0.11 சதவீதமும், சிறு, குறு நிறுவனங்கள் 0.34 சதவீதமும் ஏற்றம் கண்டன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த செவ்வாயன்று ரூ. 8,132.26 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக வர்த்தக தரவு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →