பரோடா வங்கி 
வணிகம்

பரோடா வங்கியின் புதிய வைப்பு நிதி திட்டம்

முதலீடு செய்த தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுக்கும் வசதியுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

Din

மும்பை: முதலீடு செய்த தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுக்கும் வசதியுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய வாடிக்கையாளா்கள் புத்தாக்கமான வைப்பு நிதி திட்டங்களை எதிா்பாா்க்கின்றனா். அவா்களின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், ‘பிஓபி லிக்விட் ஃபிக்சட் டிப்பாசிட்’ என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவா்கள், பணம் தேவைப்படும்போது வைப்பு நிதிக் கணக்கை முழுமையாக முடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மொத்த வைப்பு நிதியில் ஒரு பகுதியை மட்டும் திரும்பிப் பெற முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT