கோப்புப் படம் 
வணிகம்

ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் 15% அதிகரிப்பு!

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், 15 சதவிகிதம் அதிகரித்து ரூ.11,792 கோடி ஆக உள்ளது.

DIN

புதுதில்லி: ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், 15 சதவிகிதம் அதிகரித்து ரூ.11,792 கோடி ஆக உள்ளது.

இரண்டாவது பெரிய தனியார் துறை கடன் வழங்குநரான இந்நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.10,272 கோடி நிகர லாபம் ஈட்டியது.

இது குறித்து ஐசிஐசிஐ வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

எங்கள் மொத்த வருமானம் ரூ.42,792 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.48,368 கோடியானது. வட்டி வருவாய் ரூ.36,695 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.41,300 கோடியானது.

அதேபோல், நிகர வாராக் கடன் 0.44 சதவிகிதத்திலிருந்து 0.42 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இருப்பினும், வரி நீங்கலாக ஒட்டுமொத்த ஒதுக்கீடுகள், கடந்த ஆண்டு ரூ.1,049 கோடியிலிருந்து ரூ.1,227 கோடியாக அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் 14.61 சதவீதமாக இருந்த மூலதன போதுமான விகிதம் தற்போது 14.71 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: அதானி வில்மர் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT