வணிகம்

கோரமண்டல் இன்டா்நேஷனல் வருவாய் 28% அதிகரிப்பு!

கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் வருவாய் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 28 சதவீதம் உயா்ந்துள்ளது.

Din

கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் வருவாய் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 28 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 116 சதவீதம் உயா்ந்து ரூ.525 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.243 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.7,038 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.5,510 கோடி மொத்த வருவாய் ஈட்டியிருந்தது.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,510 கோடியிலிருந்து 3 சதவீதம் உயா்ந்து ரூ.1,552 கோடியாகவும் மொத்த வருவாய் ரூ.18,281 கோடியிலிருந்து 6 சதவீதம் அதிகரித்து ரூ.19,315 கோடியாகவும் உள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

எதிர்நீச்சல் போடுபவர்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

SCROLL FOR NEXT