பஞ்சாப் நேஷனல் பேங்க் 
வணிகம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் இரட்டிப்பு!

பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இரு மடங்கு அதிகரித்து ரூ.4,508 கோடி ரூபாயாக உள்ளது.

DIN

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இரு மடங்காக அதிகரித்து ரூ.4,508 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,223 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ.29,962 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.34,752 கோடியானது. அதே வேளையில் வட்டி வருமானமும் ரூ.27,288 கோடியிலிருந்து ரூ.31,340 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல் வங்கியின் நிகர வாராக் கடன் ஒரு வருடத்திற்கு முன்பு 6.24 சதவிகிதத்திலிருந்து 4.09 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இதேபோல் வங்கியின் மூன்றாவது காலாண்டு முடிவில் வங்கியின் நிகர வாராக் கடன் 0.96 சதவிகிதத்திலிருந்து 0.41 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, வாராக் கடனுக்கான ஒதுக்கீடு கணிசமாகக் குறைந்து ரூ.318 கோடியானது. இதுவே ஓராண்டுக்கு முன்பு ரூ.2,994 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: 53% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT